News August 23, 2025
கோவைக்கு நாளை வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு.!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (24.08.2025) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு காந்திபுரம் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்து, 11.35 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் ரூ.21.55 கோடி மதிப்பில் புதுப்பிப்பு பணிகளைத் தொடங்குகிறார் என திமுக மா. செயலாளர் நா. கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
கோவை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News January 21, 2026
கோவை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News January 21, 2026
BREAKING வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி!

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலைகளை ஏறிச்சென்று, சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிப்.1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தற்போது மலை ஏறும் பக்தர்களுக்காக ஏற்பாடுகளை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


