News April 2, 2025
கோவில்பட்டியில் பைக் மோதியதில் முதியவர் பலி

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). இவர் நேற்று நாலாட்டின்புதூர் அருகே நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த பைக் ஒன்று இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
தூத்துக்குடி: லாரி மீது மோதி இருவர் பரிதாப பலி

தூத்துக்குடி வாகைகுளம் டோல்கேட் அருகே நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து வந்த லோடு வாகனம் ஒன்று பூக்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டு இருந்தது. அப்போது தூத்துக்குடி செல்லும் வழியில் நான்கு வழி சாலையில் சாலை ஓரத்தில் நின்ற லாரியின் பின்பக்கத்தில் அந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் வந்த தனுஷ் மற்றும் கிளீனர் மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
தூத்துக்குடி: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

தூத்துக்குடி மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT
News January 17, 2026
தூத்துக்குடி: தொழிலாளி அடித்துக் கொலை

சாயர்புரம் அருகே கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் வில்லியம் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். அங்கு அவருடன் வேலைபார்த்து வந்த சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வில்லியம்மை சுப்பிரமணியன் அடித்து கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டிவைத்துள்ளார். இத்தகவல் அறிந்த போலீசார் சுப்பிரமணியனை நேற்று கைது செய்தனர்.


