News August 20, 2024
கோத்தகிரியில் யானை மிதித்து ஆதிவாசி பெண் பலி

கோத்தகிரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மாமரம் எஸ்டேட். அதன் அருகே காட்டு பகுதியில் உள்ள வெள்ளரி கொம்பை, சுண்டப்பட்டியை சேர்ந்த ஆதிவாசி பெண் ஜானகி (65) இன்று மாலை யானை மிதித்து பலியானதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் வனத்துறை, வருவாய்துறை, காவல் துறையினர் அங்கு விரைந்து உள்ளனர்.
Similar News
News January 14, 2026
குன்னூரில் சிலிண்டர் வெடித்து விபத்து

குன்னூர் வி.பி.தெருவில் உள்ள ஒரு கடையில் நேற்று சிறிய ரக எரிவாயு சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னூர் தீயணைப்புத் துறையினர் தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
News January 14, 2026
நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் திருவள்ளுவர் தினம் (ஜன.16), குடியரசு தினம் (ஜன.26) ஆகிய 2 நாட்களிலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் (ம) பார்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், விதியை மீறி செயல்படுபவர்கள் குறித்து 0423-2222802, 0423-2443693, 0423-2234211 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News January 14, 2026
நீலகிரி: எம்.பி. ஆ.ராசா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


