News April 6, 2024

கொளத்தூரில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரம்

image

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணிகள் நேற்று(ஏப்.5) நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் புவனேஸ்வரி, உதவி வருவாய் அலுவலர் லக்ஷ்மண குமார், செயற்பொறியாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

Similar News

News March 12, 2026

சென்னை: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

18ஆம் தேதிக்குள் மாடுகளுக்கு உரிமம் பெற உத்தரவு

image

சென்னையில் இதுவரையில் 750 மாடுகளுக்கு மட்டுமே உரிமம் பெற்று மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதிக்குள் மாடுகளுக்கு உரிமம் பெற்றிருக்க வேண்டுமென ஏற்கனவே மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் மாடுகளுக்கு உரிமம் பெறவும், மைக்ரோசிப் பொருத்தவும் ஆர்வம் காட்டத நிலை உள்ளது. 18ம் தேதிக்குள் உரிமம் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News March 12, 2026

தி.நகரில் தட்டித் தூக்கிய அதிமுக!

image

சென்னை தி.நகர் பகுதியில் தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.சத்யா முன்னிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அவர்களை வரவேற்றனர். மேலும், 2026 தேர்தலில் செயலாற்ற வேண்டியது குறித்து சத்யா அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

error: Content is protected !!