News March 26, 2024
கொலை குற்றவாளிகளை பிடிக்க 2தனிப்படை

திருச்சியை அடுத்த ஜீயபுரத்தை சேர்ந்த வீரபத்திரன். இவர் நேற்று முன்தினம் பேரூர் பஸ் நிலையம் அருகே நின்றிருந்தபோது மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து நேற்று மாலை வீரபத்திரன் உடல் உடற்கூராய்வு முடிந்த பிறகு அவர்களது உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜீயபுரம் போலிசார் வழக்கு பதிந்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News November 8, 2025
திருச்சியில் வெளிநாட்டு வாலிபர் பலி

இலங்கையை சேர்ந்தவர் வாலிபார் லுக்சானன்(19). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் திருச்சியில் உள்ள அண்ணாமலை நகரில் கார்த்திக் என்பவரை பார்க்க வந்தபோது, அங்கு மின் ஒயர் எதிர்பாராமல் மேல பட்டுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பின் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News November 8, 2025
திருச்சி: பழங்குடியின இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், சேலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை (நவ.8) வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 97905 74437 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
திருச்சி: அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து

திருச்சியில் இருந்து ஓசூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று (நவ.07) பெருகமணி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது கட்டுபாட்டை இழந்து நேருக்குநேர் மோதியது. இதில், காரின் முன்பக்கம் முழுவதுமாக உருக்குலைந்ததுடன், காரில் பயணம் செய்த இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


