News February 24, 2025
கைதானவர்களை போலீஸ் காவலில் எடுக்க போலீசார் முடிவு

திருப்பத்தூரைச் சேர்ந்த 35 வயது ஆணும், 30 வயதுடைய பெண்ணும் 19ஆம் தேதி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மலைக்கு சென்றனர். அப்போது, மலை உச்சியில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி நகை,பணத்தை வழிப்பறி செய்து, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். கைதான 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
Similar News
News March 12, 2026
கிருஷ்ணகிரி மக்களே சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
கிருஷ்ணகிரி மக்களே ரூ.5000 வேண்டுமா!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.
News March 12, 2026
கிருஷ்ணகிரி: அதிமுகவில் இணைந்தனர்; திமுக அதிர்ச்சி!

ஓசூர் திமுக இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் கார்திக், அஜித் ஆகியோர் திமுகவில் இருந்து விலகினார். இன்று (மார்ச்.11) அதிமுக மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை பொன்னாடை அணிவித்து அதிமுக சார்பில் வரவேற்றார்.


