News June 18, 2024
கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்றுள்ளது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் தென்பெண்ணையில் திறந்துவிடப்படுவதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 328 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 46.85 அடியாக தற்போது உள்ளது.
Similar News
News January 17, 2026
கிருஷ்ணகிரி: சாலை விபத்தில் ஒருவர் பலி!

அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக நேற்று முன்தினம் இரவு பெங்களூரை சேர்ந்த குமார் & நவின்குமார் ஆகிய இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், நவின்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
கிருஷ்ணகிரி: பதற்றத்தால் பறிபோன உயிர்!

மத்தூரை அடுத்த மூக்கா கவுண்டனூரை சேர்ந்தவர் பிரபாகரன் (21). இவர் நேற்று முன்தினம் பைக்கில் கொடமாண்டபட்டி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் பைக்கில் சென்ற நபர் எந்தவித சிக்னலும் போடாமல் திரும்பியதால், பதற்றத்தில் பிரபாகரன் முன்னே சென்ற வேறு வாகனம் மீது மோதினார். இதில் பிரபாகரன் உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News January 17, 2026
கிருஷ்ணகிரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (ஜன.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


