News August 21, 2024
கேரள சிறுமி கடத்தல் – ரயில் நிலையத்தில் சோதனை

கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்கிருந்து கடத்தப்பட்டதாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அந்த சிறுமி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க நாகர்கோவில் ரயில்வே போலீசார் இன்று (ஆக.21) ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் அந்த சிறுமி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 24, 2026
குமரி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் 7708239100, 8122223319 மூலமாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. SHARE IT
News January 24, 2026
குமரி: பாலியல் வழக்கில் இளைஞருக்கு தண்டனை

நாகர்கோவிலை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (28). இவர் 2022ம் ஆண்டு வேலைக்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
News January 24, 2026
குமரி: பொங்கல் விழாவில் தகராறு – இளைஞர் பலி

சரலூரைச் சேர்ந்த ரமேஷ், இவரது நண்பர் மணிகண்டன் சேர்ந்து ஜன.15 அன்று நடந்த பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறு குறித்து முகேஷ் கண்ணன் என்பவரிடம் கேட்க சென்றனர். அப்போது முகேஷ் கண்ணன் அரிவாளால் ரமேஷ் (ம) மணிகண்டனை வெட்டினார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிகண்டன் GH-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு இரட்டைக் கொலை வழக்காக மாறியுள்ளது.


