News November 25, 2025
கேரளாவுக்கு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை 1 மணிக்கு அணை நீர்மட்டம் 138 அடியை நெருங்கியதால் கேரளாவுக்கு எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை 6 மணி அளவில் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
தேனியில் இன்று இங்கெல்லாம் கரண்ட் கட்..!

தேனி, ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேனி, உப்பர்பட்டி, குன்னூர், தொப்புப்பட்டி, ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பாலகொம்பை, ஏத்தகோவில், பொம்மிநாயக்கன்பட்டி மற்றும் ராஜதானி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 21, 2026
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலையும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் பூர்த்தி செய்து வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.