News August 23, 2024
கெருகம்பாக்கம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தாழம்பூரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளியின் நிர்வாக மின்னஞ்சல் முகவரிக்கு Boms present in class room, ஜாபர் சாதிக் மெத் இஸ்யூ என்ற வாசகம் அடங்கிய மின்னஞ்சல் வந்தது. இதனையடுத்து, பள்ளி முதல்வர் ருக்மணி புகாரின் பேரில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கடந்த மாதம் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 10, 2025
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தெரு நாய்கள்

செங்கல்பட்டு நகராட்சியில், பழைய ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றி வருவதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் ரத்த காயத்துடன் வரும் நோயாளிகளை நாய்கள் அச்சுறுத்தி வருவதால் நகராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News November 10, 2025
செங்கல்பட்டில் 417 பேர் ஆப்சென்ட்

செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறை வார்டன் ஆகிய பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் 2,419 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,002 பேர் மட்டுமே தேர்வு எழுதினர் மீதமுள்ள 417 பேர் தேர்வு எழுதவில்லை என்று செங்கல்பட்டு போலீசார் தெரிவித்தனர்.
News November 10, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் (நவம்பர் 9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்காக தங்களது உள்ளூர் அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்னை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.


