News August 18, 2025

குழந்தை திருமணத்தை ஆதரித்தால் சிறை

image

பெண் குழந்தைகளுக்கு 18 வயதும், ஆண் குழந்தைகளுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் திருமணம் செய்து வைப்பதும், ஆதரிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர இயலாது. குழந்தை திருமணத்தை நடத்தி வைத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால் 1098 அல்லது 181 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.

Similar News

News December 9, 2025

விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 9, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

1. இங்கு <>க்ளிக் <<>>செய்து ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News December 9, 2025

விருதுநகர்: ரூ.10 லட்சம் பரிசு வேண்டுமா… கலெக்டர் அறிவிப்பு

image

ஒற்றைப் பயன்பாடு நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் பயன்படுத்துவதை ஊக்குவித்து முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சிய சுகபுத்ரா தெரிவித்துள்ளார். முதல் பரிசாக ரூபாய் 10 லட்சம் இரண்டாம் பரிசாக ரூபாய் 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!