News November 14, 2024

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பேரணி

image

வெண்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி முதல் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகம் வரை, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி (யோகா) மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கொடி அசைத்து துவங்கி வைத்தார். குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “Walk for Children” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெற்றது.

Similar News

News February 19, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞருக்கு தாட்கோ மூலம் இலவச அழகு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்த 18-35 வயது வரை உள்ள இருபாலரும் இதில் பங்கேற்கலாம். 90 நாட்கள் பயிற்சி முடித்தவுடன் ரூ.18,000- 25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு கலெக்டர் சினேகா அறிவித்துள்ளார்.

News February 19, 2026

செங்கல்பட்டு: தீ பற்றி எரிந்த 10 கார்கள்!

image

மாமல்லபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் குற்ற வழக்குகளிலும், சாலை விபத்துகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட 10 கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

News February 19, 2026

செங்கல்பட்டு: 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

image

புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் இறையன்பு(21). இவர் பழைய பெருங்களத்தூர், கிரீன் சிட்டி பகுதிக்கு இறையன்பு மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர். அப்போது அங்கு இருந்த மற்றொரு தரப்புக்கும், இறையன்புவின் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கும்பல் இறையன்புவின் வீட்டிற்கே சென்று வெட்டியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த அவரின் தந்தை, சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

error: Content is protected !!