News November 13, 2025
குளிர்கால சரும பொலிவுக்கு நைட்ல இத பண்ணுங்க!

குளிர்காலத்தில் சரும பாதிப்பு அதிகமாக இருக்கும். Moisturizer தடவியும் பலன் இல்லை என நினைப்பவர்கள் வீட்டிலேயே இந்த கிரீமை செய்து தடவுங்கள். *2 வைட்டமின் E கேப்ஸ்யூல்கள், 4 துளி ஆலிவ் ஆயில், 2 துளி பாதாம் ஆயில், 4 துளி ரோஸ்மேரி எண்ணெய், ஒரு ஸ்பூன் பப்பாளி ஜெல் ஆகியவற்றை நன்றாக கலக்கி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். தினமும் இரவு தூங்கும் முன் இதை தடவினால் முகம் பொலிவாக மாறும்.
Similar News
News December 12, 2025
ரயில்வேக்கு சொந்தமாக இவ்வளவு நிலமா?

ரயில்வேக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்பு பற்றிய கேள்விக்கு, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 4.99 லட்சம் ஹெக்டேர் நிலம் இந்திய ரயில்வேக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1068.54 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், RPF & உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
News December 12, 2025
நாளை பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் நாளை(டிச.13) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் கடந்த வாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடுசெய்யும் விதமாக, வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இதேபோன்று அறிவிப்பு வெளியாகலாம்.
News December 12, 2025
ஒரு கூட்டு கிளியாக.. அண்ணன் தம்பினா இப்படி இருக்கணும்

வயதான பெற்றோரை சிலர் புறக்கணிக்கும் இக்காலத்தில், தாயை நான் தான் கவனிப்பேன் என சகோதரர்கள் பாச போராட்டம் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. வேலைக்கு செல்லாமல் இருக்கிறார் அண்ணன். தம்பியோ, பண வசதியுடன் வேலையிலும் இருக்கிறார். ஆனால், ‘இரு மகன்களும் எனது இரு கண்கள்’ என்றார் பாசத் தாய். இறுதியில் பண வசதியுடன் உள்ள தம்பியிடமே உரிமையை ஒப்படைக்கிறது கோர்ட். நீங்க என்ன சொல்றீங்க?


