News August 17, 2025

குற்றாலம் செல்வோர் கவனத்திற்கு!

image

பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் வனத்துறை அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறி சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் இரும்பு கம்பியிலான டோல் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரும்பு கேட் அமைத்த வனத்துறையினர். மாலை 6 மணிக்கு மேல் பழைய குற்றால அருவிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல். *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 6, 2025

தென்காசி: 2 கிராமத்திற்கு ரூ.1 கோடி பரிசு

image

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை மற்றும் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கே.ஆலங்குளம் மற்றும் கலிங்கப்பட்டி ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்கத்திற்கான விருதுக்கு தேர்வு. கலிங்கப்பட்டி மதிமுக தலைவர் வைகோ சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2025

ஆலங்குளம்: போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு! 2 பேர் கைது

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற போலீஸ் ஏட்டு முருகன் என்பவரை இரு நபர்கள் அரிவாளால் வெட்டினர். போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டியதாக பொத்தையை சேர்ந்த இசக்கி பாண்டி (28) அவரது நண்பர் பேச்சி துரை (19) ஆகிய இருவரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

News December 6, 2025

தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!