News July 16, 2024
குறைதீர்க்கும் கூட்டம் 403 மனுக்கள் குவிந்தன

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை,வேலை வாய்ப்பு,பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
Similar News
News July 8, 2025
வரலாற்று சிறப்புடைய புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக பல சிறப்புகள் கொண்டது. இங்குள்ள அருங்காட்சியகம், குன்றாண்டார் கோயில், காட்டுபாவா பள்ளிவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, மலையடிப்பட்டி, கொடும்பாலூர் போன்ற இடங்கள் இன்றளவும் புதுகை மக்களின் வரலாற்றை பேசுகிறது. மேலும் புதுகை மாவட்டத்தில் பல கிராமங்களில் தொன்மை வாய்ந்த மற்றும் பெருங்கற்கால புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ)100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் பெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News July 7, 2025
புதுகை: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000-ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு<