News October 19, 2025

குமரி: வெங்கடாஜலபதி கோயிலில் நாளை தீபாவளி ஆஸ்தானம்

image

திருப்பதியில் ஆண்டுந்தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருவது போல், கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலிலும் தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நாளை நடைபெறும். நாளை சுப்ரபாதம் நிகழ்ச்சியும், தொடர்ந்து விசேஷ பூஜைகள், சிறப்பு வழி பாடுகளும் நடைபெறும். சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து, மலர் அலங்காரம், பூலங்கி சேவை, தீபாராதனை ஆகியன நடைபெறும்

Similar News

News December 16, 2025

குமரி: 1.53 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்?

image

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குமரியில் 6 சட்டமன்ற தொகுதியில் 1.53 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், இறந்தவர்கள், நிரந்தர குடிபெயர்ந்தவர்கள், இருப்பிடத்தில் வசிக்காதவர்கள் அடங்கும். மேலும், 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கானு இங்கு <>கிளிக் <<>>செய்து தெரிஞ்சிக்கோங்க. SHARE IT

News December 16, 2025

குமரியில் நாளை மின்தடை அறிவிப்பு!

image

மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (டிச.17) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கோட்டார், இடலாகுடி, கணேசபுரம், பறக்கை ரோடு, ஓழுகினசேரி, வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், தளவாய் தெரு, பத்தல்விளை, வேப்பம்மூடு, பெருமாள் மண்டபம் சாலை, மீனாட்சி கார்டன் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

குமரி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!