News November 26, 2025
குமரி: மீனவர்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். SHARE
Similar News
News January 15, 2026
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000…!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News January 15, 2026
குமரியில் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

குமரி மாவட்டம், தென்தாமரைகுளம் அருகே தேரிவிளையை சேர்ந்தவர் பொன்தங்கம் (42). இவர் இழுப்பு நோயினால் அவதிப்பட்டு வந்தார். மேலும், திருமணம் ஆகாமல் இருந்து வந்த அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் நேற்று (ஜன.14) வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 15, 2026
குமரியில் காலை முதலே படகு சேவைகள் தொடக்கம்

பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலையில் நேற்று (ஜன.14) மகர விளக்கு தெரிந்ததை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் உட்பட ஏராளமானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் இன்று காலை 6 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும், மாலை 5 மணி வரையிலும் தொடர்ந்து பட போக்குவரத்து நடைபெறும். இன்று முதல் மூன்று நாட்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


