News October 10, 2024

குமரி மாவட்ட எம் பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

image

இரணியல் ரயில் நிலையம் அருகாமையில் ஜல்லி யார்டு அமைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வந்நது. அது மக்களுக்கு மிகவும் பாதிப்பாக இருப்பதை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த ஜல்லி யார்டை மாற்றாவிட்டால் குமரி மாவட்ட அளவில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Similar News

News December 9, 2025

குமரியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 9, 2025

நாகர்கோவில் ரயிலில் பெண் திடீர் பலி

image

நேற்று (டிச.8) திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண்ணுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே, வள்ளியூர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் உயிரிழந்த பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெபியோலா (63) என தெரிந்துள்ளது.

News December 9, 2025

நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நுள்ளிவிளை பகுதியில் அமைந்துள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய பாலம் அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து வருகிறது. இதனை ஒட்டி திங்கள் சந்தை – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!