News August 18, 2025
குமரி மாவட்ட ஆட்சியரிடம் மடிக்கணினி பெற்ற மாணவன்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள மாணவன், மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனுக்கு ஆட்சியர் அழகு மீனா மடிக்கணினி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News December 6, 2025
குமரி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 7 இருசக்கர வாகனங்கள், 7 ஆட்டோக்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 18 வாகனங்கள் இம்மாதம் 9ம் தேதி ஏலம் விடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடைபெறும் என்று உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
குமரி: தண்டவாளத்தில் தலை வைத்து மாணவர் தற்கொலை

தக்கலை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதி ரயில் டிரைவர் கொடுத்த தகவல் அடிப்படையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விசாரணையில், உயிரிழந்த இளைஞர், வேளாங்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் பவித்ரன்(18) என்பதும், அவர் நாகர்கோவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் விசாரணை.
News December 6, 2025
குமரி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

குமரி மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேலமணக்குடி, முகிலன்விளை, மதுசூதனபுரம், புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பொட்டல், வெள்ளாளன்விளை, பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, பருத்திவிளை, காக்காதோப்பு, ஆலுவிளை, மருதங்கோடு, புலியூர்சாலை, அருமனை, பளுகல், களியக்காவிளை, விளவங்கோடு, கழுவன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். SHARE


