News August 21, 2024

குமரி மாவட்டத்திற்கு காலை 10 மணி வரை மழை

image

தமிழ்நாட்டில் இன்று (ஆக.,21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

Similar News

News January 24, 2026

குமரி: விஷம் குடித்து பெண் தற்கொலை

image

கருங்கல் அருகே பாலூர் அரசமூட்டு விளையை சேர்ந்தவர் விஜயகுமாரி (46). கணவருக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் விஜயகுமாரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த விஜயகுமாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 24, 2026

குமரி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

image

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் 7708239100, 8122223319 மூலமாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. SHARE IT

News January 24, 2026

குமரி: பாலியல் வழக்கில் இளைஞருக்கு தண்டனை

image

நாகர்கோவிலை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (28). இவர் 2022ம் ஆண்டு வேலைக்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!