News August 22, 2025

குமரி: மருமகனைக் கொன்ற மாமனார் கைது!

image

மயிலாடி, சிபின்(25) என்பவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு சிபினிடம் சண்டையிட்டு, பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். நேற்று(ஆக.21) மனைவியை அழைத்து வர சிபின் சென்றபோது ஏற்பட்ட தகராறில், சிபினின் மாமனார் ஞானசேகரன் மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கி சிபின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிபின் உயிரிழந்தார். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர்.

Similar News

News January 20, 2026

குமரி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

சிவகங்கை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <>கிளிக்<<>> செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றிகொள்ளலாம். தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 20, 2026

குமரி ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

நாகர்கோவில் வரை இயக்கப்பட்ட 7 ரயில்கள் கன்னியாகுமரி வரை நிரந்தரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தாம்பரம் – நாகர்கோவில் வாரம் மும்முறை , தாம்பரம் – நாகர்கோவில் ரயில், வாராந்திர நாகர்கோவில் – திருநெல்வேலி பாசஞ்சர் , புனலூர் நாகர்கோவில் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் நிரந்தரமாக கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது.

News January 20, 2026

குமரி ஆட்சியர் திடீர் டெல்லி பயணம்

image

குமரி மாவட்டதின் 53-வது ஆட்சியராக கடந்த 2024-ம் ஆண்டு அழகுமீனா பதவியேற்றார். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன் நின்று சிறப்பாக மேற்கொண்ட நிலையில் அவருக்கு டெல்லியில் இருந்து அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

error: Content is protected !!