News September 30, 2025
குமரி: புனலூர் ரயிலை நீட்டிக்க மனு

நாகர்கோவில் வழியாக செல்லும் புனலூர் மதுரை ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நிற்காமல் செல்லும் ரயில்கள் ஒரு நிமிடம் குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று குழித்துறை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தமிழக அமைச்சரும் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான மனோ தங்கராஜ்டம் இன்று மனு அளிக்கப்பட்டது.
Similar News
News December 15, 2025
குமரி: காதலன் மது குடித்ததால் மாணவி தற்கொலை

தக்கலை ஆசான் கிணறு பகுதியை சேர்ந்த +2 மாணவி கடந்த டிச.13ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று தக்கலை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் மாணவி அதே பகுதியை சேர்ந்த வாலிபரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், டிச.13ல் காதலனைதேடி அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் மதுகுடித்துக் கொண்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவி வீட்டில் வந்து தற்கொலை செய்ததாகவும் தெரியவந்தது.
News December 14, 2025
ஆபத்தாக நிற்கும் மரத்தை அகற்ற கோரிக்கை

ஆற்றூர் பகுதி கிறிஸ்தவ ஆலயம் முன் சாலையோரம் மாமரம், புளியமரம் என 2 மரங்களின் வேர் பகுதி சேதமடைந்து ஓட்டை விழுந்த நிலையிலும், மண்ணின் பிடிப்பற்ற நிலையிலும் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் இந்த மரங்கள் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 14, 2025
கன்னியாகுமரியில் கட்டுப்பாடு விதித்த எஸ்பி

மருங்கூர் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் அண்மையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டதை தொடர்ந்து, அதில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் ரிசார்ட் மற்றும் ஹோட்டல்கள் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


