News April 10, 2024

குமரி: நில புரோக்கர் வீட்டில் 3 லட்சம் கொள்ளை

image

குளச்சல் அருகே உள்ள சாஸ்தான் கரை பகுதியை சேர்ந்தவர் கார்லுஸ். நில புரோக்கரான இவர் நில விற்பனையில் கிடைத்த 3 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படைக்கு பயந்து வங்கிக்கு கொண்டு செல்லாமல் வீட்டில் வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர். அவர் கொடுத்த புகாரின்பேரில், சிசிடிவியில் பதிவான 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு குளச்சல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 16, 2025

குமரி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

image

வேம்பனூரை சேர்ந்தவர் ஜெயசேகரன்(50). செட்டிக்குளம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்த இவர் அகஸ்தீஸ்வரம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தென்தாமரைக்குளம் போலீசார் விசாரணை.

News December 16, 2025

குமரி: போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்.!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News December 16, 2025

குமரி: 1.53 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்?

image

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குமரியில் 6 சட்டமன்ற தொகுதியில் 1.53 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், இறந்தவர்கள், நிரந்தர குடிபெயர்ந்தவர்கள், இருப்பிடத்தில் வசிக்காதவர்கள் அடங்கும். மேலும், 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கானு இங்கு <>கிளிக் <<>>செய்து தெரிஞ்சிக்கோங்க. SHARE IT

error: Content is protected !!