News June 18, 2024
குமரி: சி.பி.ஐ.எம் கண்டன ஆர்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர குழு சார்பில் இன்று சி.பி.ஐ.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வந்த தம்பதிகளுக்கு அடைக்கலம் வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை சூறையாடியதையும், நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Similar News
News January 22, 2026
குமரி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

குமரி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்தும் 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <
News January 22, 2026
குமரி: மனைவியை கொடுமை செய்த கணவன்

மார்த்தாண்டத்தை சேர்ந்த சுபைதா – ஜெரின் தம்பதியருக்கு 2021-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 84 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் வீட்டிலிருந்து கார் (ம) குடும்ப சொத்தில் ஒரு பங்கை வாங்கி வருமாறு அவரது கணவர் கொடுமைபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு.
News January 22, 2026
நாகர்கோவில்: பெண் மீது தாக்குதல்..!

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவர் கணவருக்கு உதவியாக கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அங்கு வந்த சேகர் என்பவருக்கும், பார்வதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேகர் டீக்கடை பாய்லரில் உள்ள வெந்நீரை பார்வதி மீது ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த அவர் GH-ல் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.


