News November 19, 2025
குமரி: காட்டு யானை (இராதாகிருஷ்ணன்) உயிரிழந்தது

நீலகிரி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ‘இராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அப்பர் கோதையாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே அது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 12, 2026
BREAKING: குமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்த சடலம்

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் வந்தது. ரயிலில் இருந்து அனைவரும் இறங்கி சென்ற நிலையில் ரயில் பெட்டிகளை ரயில்வே போலீசார் சோதனை செய்த நிலையில் ரயில் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருக்கையின் அடியில் படுத்து கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
News January 12, 2026
சுற்றுச்சூழலை பாதிக்கும் டயர்களை எரிக்க வேண்டாம்

பொங்கலின் முந்தைய நாளான போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். குமரியில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் உள்ள டயர் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம். மேலும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவுறுத்தியுள்ளார்.
News January 12, 2026
குமரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


