News October 20, 2025
குமரி: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

குமரி மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 9, 2025
குமரி: ரூ.100 கோடி சுருட்டல்? போஸ்டர்களால் பரபரப்பு

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் நியமிக்கப்பட்டு அவர் கட்சிப் பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கிய வகையில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் 100 கோடி ரூபாய் சுருட்டியதாக சமூக நீதி மாணவர் பேரவை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
News December 9, 2025
குமரியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 9, 2025
நாகர்கோவில் ரயிலில் பெண் திடீர் பலி

நேற்று (டிச.8) திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண்ணுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே, வள்ளியூர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் உயிரிழந்த பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெபியோலா (63) என தெரிந்துள்ளது.


