News August 19, 2024

குமரி அருகே ஆபாச வீடியோ எடுத்தவர் போக்சோவில் கைது

image

குமரி மாவட்டம் தென் தாமரைகுளம் இலந்தையடியை சேர்ந்தவர் அபினேஷ்(23). இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சிறுமியுடன் பழகி, அவரை ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் போக்கோ சட்டத்தில் இவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று(ஆக.,18) கைது செய்தனர். மேலும் வீடியோவை பதிவிறக்கம் செய்து பலருக்கு அனுப்பிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Similar News

News January 17, 2026

குமரி: 2 நாட்களில் ரூ.7.11 கோடிக்கு மது விற்பனை

image

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பண்டிகை நாட்களில் மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகை முதல் நாள் ஜன.14ம் தேதி ரூ.3.01 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. பொங்கல் நாளன்று ரூ.4.10 கோடி என மொத்தம் இரண்டு நாட்களில் மட்டும் ரூ.7.11 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

News January 17, 2026

குமரி: டிகிரி போதும்… ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

குமரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் செய்து<<>> பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

குமரி: காதல் தோல்வியால் இளைஞர் விபரீத முடிவு…

image

தக்கலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (24). பட்டதாரியான இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் திடீரென ஸ்ரீகாந்திடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த ஸ்ரீகாந்த் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!