News September 28, 2025
குமரியில் குரூப் 2 தேர்வில் 3243 பேர் ஆப்சன்ட்

குமரி மாவட்டத்தில் நடந்த குரூப் 2 தேர்வை 13 ஆயிரத்து 225 எழுத நுழைவு சீட்டுகள் வழங் கப்பட்டிருந்தது. 9982 பேர் பங்கேற்று எழுதினர். 3243 பேர் தேர்வு எழுத வரவில்லை. நாகர்கோவில் பகுதிகளில் 2265 பேரும், விளவங்கோடு பகுதிக ளில் உள்ள மையங்களில் 978 பேரும் தேர்வு எழுத வருகை தரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
Similar News
News November 14, 2025
குமரியில் பெண்கள் உட்பட 1067 பேர் கைது

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதத் தங்கராஜை கண்டித்து குமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் உட்பட மாவட்டத்தில் 23 இடங்களில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் பங்கேற்ற 144 பெண்கள் உட்பட 1067 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் MLA எம்ஆர் காந்தி ஆகியோர் அடங்குவர்.
News November 14, 2025
குமரி: போக்சோ வழக்கில் 40 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின்.
இந்த வருடத்தில் மட்டும் 40 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
News November 14, 2025
நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் கைது

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனதா சங்கத்தின் மீது அவதூறு பரப்பி வரும் அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


