News March 23, 2024

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

image

தச்சநல்லூர் மேக்கரையை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் மீது 5 கொலை வழக்கு, 12 கொலை முயற்சி உள்ளிட்ட 25 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட அவரை போலீசார் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் பிடித்து கைது செய்தனர். துணை போலீஸ் கமிஷனர் கீதா பரிந்துரையின்படி போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் படி மணிகண்டன் இன்று (மார்ச் 23) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Similar News

News November 7, 2025

நெல்லை: வினாத்தாள் மாறியதால் தேர்வில் குழப்பம்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடந்த பி.காம் அரியர் தேர்வில் வினாத்தாள் குழப்பம் ஏற்பட்டது. 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ‘மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்’ தேர்வுக்கு பதில் தவறுதலாக ‘ரீடைல் மார்க்கெட்டிங்’ வினாத்தாள் வழங்கபட்டது. பின்னர் சரியான வினாத்தாள் தரபட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு நடந்தது. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கபட்டதாகவும் பல்கலை வட்டாரம் கூறியது.

News November 7, 2025

இன்று இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.6) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News November 7, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.6] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தாமரை கண்ணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!