News May 15, 2024
குடிபோதையில் குளிக்க சென்றவர் கண்மாயில் மூழ்கி சாவு

ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் அருகே உள்ள யேலூர் கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரது மகன் ரமேஷ் (43). இவர் நேற்று பண்ணைவயல் அத்தானி கண்மாய் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். இவரது மனைவி பரிமளா (33) கொடுத்த புகாரில் திருவாடானை போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
ராமநாதபுரம் மாவட்ட நண்பகல் காவல் ரோந்து அதிகாரிகள்

இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கீழக்கரை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவைக்கு இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
ராமநாதபுரம்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
News December 6, 2025
ராமேஸ்வர பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு

இராமேஸ்வரம் -சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற டிச.07, 08 முதல் மீண்டும் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராமேஸ்வரம்- சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் சென்னை எழும்பூர் வரை சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


