News May 14, 2024
குடிநீர் விநியோகம் நிறுத்தம் என ஆட்சியர் அறிவிப்பு

சீர்காழி மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் 134 கடலோர குடியிருப்புகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் மே 17 அன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார். தொடர்ந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எடக்குடி வடபாதி முதல் மாமாகுடி வரையிலான பிரதான குடிநீர் உந்துகுழாய்களில் பழுது சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
மயிலாடுதுறை: கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

மயிலாடுதுறை சித்தர் காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை வாக்குப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பார்வையாளர் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி (சண்டிகர்) சோரப் குமார் அரோரா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News December 12, 2025
மயிலாடுதுறை: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 12, 2025
மயிலாடுதுறை: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க


