News March 27, 2024
குடவாசல்: தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிப்பு

குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 92 நடுநிலை/தொடக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்டு 26 பேர் தற்காலிக ஆசிரியர்கள் மாதம் 12000 ரூபாய் மதிப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மதிப்பூதியம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் குமரேசன் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.
Similar News
News January 18, 2026
திருவாரூர்: கோயிலுக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்

மன்னார்குடி அடுத்த மேலதுளசேந்திரபுரத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (74). இவர் சம்பவத்தன்று வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடந்தபோது அவர் மீது பைக் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் காயமடைந்த அவரை மீட்டு மன்னார்குடி GH-ல் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 18, 2026
திருவாரூர்: தடையை கண்டித்து மக்கள் தர்ணா

முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மணல்மேடு கிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற இருந்த நிலையில் போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் சுமார் 200 பேர் திரண்டு விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் அனுமதி வழங்கினர். இதனையடுத்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
News January 18, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


