News November 19, 2024
குடகானாறு அணை நீர் இன்று திறப்பு

வேடசந்தூரில் 27 அடி கொண்ட அழகாபுரி குடகனாறு அணை நேற்று இரவு 7 மணிக்கு 26 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வருவதால் இன்று காலை 10 மணிக்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் திறப்பதாக உதவி பொறியாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுள்ளார்.
Similar News
News December 10, 2025
கொடைக்கானலில் அதிரடி கைது!

கொடைக்கானல் பாம்பார் புரம் பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சுற்றுலா பயணிகளுக்கு போதைக் காளான் வழங்கி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 30 கிராம் போதைக் காளான் பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 10, 2025
திண்டுக்கல்லில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025 அன்று சனிக்கிழமை ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். எனவே இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.
News December 10, 2025
வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிக் (37), முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), ராஜதுரை (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


