News November 14, 2025
குஜிலியம்பாறையில் இறப்பிலும் இணைந்த தம்பதி!

குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் எதிரே மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர் தங்கவேல் (67) நேற்று முன்தினம் மாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை கண்ட அவரது மனைவி சிவஜோதி (60) கதறி அழுதபடியே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்து உடல்கள் ஒன்றாக மணியகாரன்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 5, 2025
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சடலம்!

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். முன்பு கடந்த 2ம் தேதி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உதயகுமார்(48) என்பதும், சில மாதங்களுக்கு முன்பு வீடு விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச 4) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.