News June 18, 2024

கீழடி 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடக்கம்

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்துக்குள்பட்ட கீழடி, கொந்தகை ஆகிய இடங்களில், பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை, அகழ்வாராய்ச்சி தளத்தில் இன்று ( ஜூன் 18) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில், சிவகங்கை எம்பி காா்த்தி சிதம்பரம், மானாமதுரை எம்எல்ஏ ஆ. தமிழரசி ரவிக்குமாா், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் கலந்து கொள்கின்றார்கள்.

Similar News

News January 17, 2026

சிவகங்கை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News January 17, 2026

சிவகங்கை: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 17, 2026

சிவகங்கை அரசு மருத்துவமனையில் தொடர் திருட்டு!

image

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மானவர் விடுதியில் சில நாட்களுக்கு முன் 3 பேரின் செல்போன்கள் திருடு போனது. இந்நிலையில் நேற்று முந்தினம் டாக்டர் ஒருவரின் டூவீலரை மர்ம நபர்கள் திருடிச் சென்றார். டாக்டர் போலீசில் புகார் அளித்ததும், மர்ம நபர் டூவீலரை மீண்டும் அதே இடத்தில் நிறுத்திவிட்டு தப்பி சென்றார். போலீஸார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!