News April 7, 2024
கிருஷ்ணாபுரம் கோயிலில் வெடிகுண்டு சோதனை

நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கோயிலில் நேற்று இரவு மோப்பநாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படை பிரிவினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை நடத்தினர்.
Similar News
News March 12, 2026
நெல்லை: எல்லா சேவைகளுக்கும் இந்த ஒரு LINK போதும்.!

நெல்லை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.
News March 12, 2026
நெல்லையில் அதிரடி கைது

நெல்லை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாளையை சேர்ந்த ராமகிருஷ்ணன்(28) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மது விலக்கு அமலாக்க பிரிவு குற்ற எண் 42/2026 ன் படி வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
News March 12, 2026
நெல்லையில் வாலிபர் மர்ம மரணம்

மானூர் அருகே உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த லின்சன் மைக்கேல் தனது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த மைக்கேல் வேலைக்கு செல்லாமல் உக்கிரன்கோட்டையில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் அங்குள்ள கருமேனியன் குளத்தில் அவருடைய உடல் மிதந்துள்ளது. மானூர் போலீசார் உடலை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


