News April 25, 2025

கிருஷ்ணகிரி 732 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 732 சமையல்  உதவியாளர் பணியிடங்களுக்காக ஏப்.25 தேதி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நேரடியாகவோ தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி ஏப்.30ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். *இந்நற்செய்தியை அனைவருக்கும் பகிரவும்*

Similar News

News November 17, 2025

கிருஷ்ணகிரி: சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

image

ஒசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்த வெங்கட்ராஜ் ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளியே வந்தவர் மஞ்சுநாத். மஞ்சுநாத் நடந்து சென்றபோது, அவரைப் பழிவாங்கும் நோக்குடன் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறுவன் ஒருவன் உட்பட 4 பேரை ஒசூர் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News November 17, 2025

கிருஷ்ணகிரி: ஆசிரியர் தகுதி தேர்வு 1,327 பேர் ஆப்சென்ட்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்,
ஆசிரியர் தகுதி தேர்வு 2 நாட்கள் நடந்தன. நேற்று, (நவ.16) 2ம் தாளிற்கான தேர்வு நடந்தது. இதற்கு மாவட்டத்தில் மொத்தம்,10,657 பேர் விண்ணப்பித்திருந்தனர். கிருஷ்ணகிரி, பர்கூர், எலத்தகிரி, சூளகிரி, குந்தாரப்பள்ளி, காவேரிப்பட்டணம் ஆகிய இடங்களில் மொத்தம்,34 மையங்களில் நடந்த தேர்வில் 9,330 பேர் தேர்வு எழுதிய நிலையில் 1,327 பேர் பங்கேற்கவில்லை.

News November 17, 2025

கிருஷ்ணகிரி: இரவு காவலர் ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (நவ.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!