News November 19, 2025
கிருஷ்ணகிரி: 12th முடித்தவர்களுக்கு சூப்பர் update

சர்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க தாட்கோ முன் வந்துள்ளது. ஆதிதிராவிடர் & பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட ATA–CANADA நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்படும். www.tahdco.com -ல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
கிருஷ்ணகிரி: இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News January 25, 2026
கிருஷ்ணகிரி :இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

கிருஷ்ணகிரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை,மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News January 25, 2026
கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி; நாய்கள் வெறிச்செயல்!

போச்சம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி தேவன். நேற்று (ஜன.24) அதிகாலை நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்த இவர் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறி சாலையில் இழுத்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் தெரு நாய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


