News November 13, 2025
கிருஷ்ணகிரி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே… வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 7, 2025
கிருஷ்ணகிரி: கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது

ஓசூர் அருகே அதிமுக பிரமுகர் ஹரீஷ் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் விசாரணையில், ஹரீஷ் தனது கள்ளக்காதலி மஞ்சுளாவிடம் இருந்து ரூ.80 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும், மஞ்சுளாவின் மற்றொரு ஆண் நண்பர் மோனிஷ் உடன் பழகக்கூடாது எனத் தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்த மஞ்சுளா கூலிப்படை ஏவிக் கொலை செய்தது தெரியவந்தது. மஞ்சுளா, மோனிஷ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் பின்பக்க தலையில் அடிபட்டு பலி!

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாதநபர் ஒருவர் கிருஷ்ணகிரியிலருந்து ஓசூரை நோக்கி பேரண்டபள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று (டிச.6) மாலை வரும் பொழுது. பின்னால் வந்த அடையாளம் தெரியாத வண்டி இடித்துச் சென்றதில் கீழேவிழுந்து பின்பக்க தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் போலீசார் இறந்த நபர் மற்றும் அவரை இடித்துச் சென்ற வாகனம் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.07) காலை வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


