News November 25, 2025
கிருஷ்ணகிரி: லாரி மீது பஸ் மோதி 11 பேர் காயம்

கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, குருபரப்பள்ளி அருகே பண்டாரப்பள்ளியில் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சூளகிரி சுவேதா, கடத்தூர் விஜயா உட்பட 11பயணிகள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
கிருஷ்ணகிரி: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
News January 13, 2026
கிருஷ்ணகிரி: முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.*செம திட்டம். தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News January 13, 2026
கிருஷ்ணகிரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<


