News August 7, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 73.7 மி.மீ. மழை பதிவானது. இதேபோல் அஞ்செட்டி 2.4, பாரூர் 3.4, தேன்கனிக்கோட்டை 5.0, ஒசூா் 14.8, நெடுங்கல் 4.8, பெனுகொண்டாபுரம் 7.2, போச்சம்பள்ளி 5.2, சூளகிரி 2.0, ஊத்தங்கரை 30, சின்னார் அணை 4, கெலவரப்பள்ளி அணை 53, கிருஷ்ணகிரி அணை 37, பாம்பாறு அணை 29.மி. மீ மழையும் பதிவாகியுள்ளது.

Similar News

News November 10, 2025

கிருஷ்ணகிரி: டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி!

image

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, வஞ்சிரபள்ளத்தில் மாந்தோப்பிற்குள் டாஸ்மாக் கடை இயங்குகிறது. கடை விற்பனையாளராக பன்னீர்செல்வம் (40) என்பவர் உள்ளார். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, மர்ம நபர்கள் சிலர், டாஸ்மாக் கடை பூட்டை உடைத்துள்ளனர். அவ்வழியாக ரோந்து சென்ற, ராயக்கோட்டை போலீசார், சத்தம் கேட்டு அங்கு சென்றபோது, மர்ம நபர்கள் தப்பியோடினர். ராயக்கோட்டை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News November 10, 2025

ஓசூரில் மகனை கொலை செய்த தாய் தற்கொலை!

image

ஓசூர் மாநகராட்சி எம்.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் லீமா. இவருக்கு 9 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இவரது மகனுக்கு தீராத நோய் இருக்கவே, ரீச்சர்ட் லீமா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று (நவ.9) இவர் தனது மகனை தலையணையால் மூச்சு திணறடித்து கொலை செய்து விட்டு, தானும் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 10, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (09.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!