News August 23, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.!

image

வாழ்த்துக்கள்! உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது, ஆனால் இந்த வேலைக்கு சேர 50,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்” போன்ற குறுந்தகவல்கள் வந்தால் நம்ப வேண்டாம். இப்படிப் பட்டவை அனைத்தும் மோசடி செய்திகளாகும். பகுதி நேர வேலை, ஆன்லைன் வேலை என்ற பெயரில் முன்பணம் அல்லது முதலீடு கோரும் யாரையும் நம்ப வேண்டாம். பணம் செலுத்தினால் மீட்க இயலாது. அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தல்.

Similar News

News January 19, 2026

கிருஷ்ணகிரியில் வாலிபர் பரிதாப பலி!

image

சனமாவு வனப்பகுதி அருகே சாலையைக் கடக்க வந்த மான் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மான் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 19, 2026

கிருஷ்ணகிரி மக்களே கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க

image

கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை <>’TN SMART’ <<>>இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 23, 2026 (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் வேளாண் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து தீர்வு காணலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!