News July 11, 2024
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை – 949816889, பர்கூர் – 9498175515, கிருஷ்ணகிரி – 9498178629, ஓசூர் – 9842788031, தேன்கனிக்கோட்டை – 9498166367. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக மேற்கண்ட எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News July 8, 2025
தேன்கனிக்கோட்டை பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவி பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.
News July 8, 2025
அரசு பள்ளிக்கு விருது வழங்கிய அமைச்சர்

கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு அரசு மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான பிரிவில் அறிஞர்அண்ணா தலைமைத்துவ விருதினையும், பரிசுத் தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
News July 7, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ( ஜூலை 7) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.