News August 8, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழையே பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

Similar News

News November 12, 2025

ஓசூருக்கு ஓர் குஷியான செய்தி…

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் சைட் கிளியரன்ஸ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில், பேரிகை–பாகலூர் அருகே பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் நிலம் கையகப்படுத்துதல் தொடங்கப்படும், எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 12, 2025

கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (11.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 14.11.2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தகவல். முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை சமர்ப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்

error: Content is protected !!