News November 13, 2025
கிருஷ்ணகிரி: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)
Similar News
News December 16, 2025
கிருஷ்ணகிரி: ரூ.1 கோடி கடன் பெற ரூ.4 லட்சம் நாமம்!

கிருஷ்ணகிரி:ஆந்திர தொழிலதிபர் ஜெகதீஷ்(36) என்பவரிடம், 1 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி, 4 லட்சம் ரூபாய் பறித்த மோசடி கும்பலை போலீசார் வேலூரில் சுற்றி வளைத்தனர். ரூ.1 கோடி குறைந்த வட்டியில் கடன் பெற ரூ. 4.15 லட்சம் தர வேண்டும் என சதீஸ் என்பவர் தொழிலதிபர் ஜெகதீஷிடம் கூறியுள்ளார். அதை நம்பிய அவர் ரூ.4.15 லட்சம் பணத்தை தரும் போது சதீஸ் கும்பலை சேர்த்த 8 பேர் பணத்தை பறித்து தப்பி சென்றுள்ளார்.
News December 16, 2025
கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, கே.அக்ரஹாரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(டிச.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 16, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


