News August 19, 2024
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் முன்னாள் நா.த.க நிர்வாகி கைது

கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் நா.த.க. நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை நள்ளிரவில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஏற்கனவே பாலியல் வழக்கில் தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
கிருஷ்ணகிரியில் 333 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்!

கிருஷ்ணகிரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன-26 தேதி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் செய்ய வேண்டும் எனவும், கிராம மக்கள் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தினார்.
News January 24, 2026
கிருஷ்ணகிரி: கனவு இல்லத்தை நினைவாக்க CLICK HERE

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
கிருஷ்ணகிரி: ரூ.5லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<


