News November 25, 2025

கிருஷ்ணகிரி: தாய் சொன்ன வார்தையால் மனமுடைந்த சிறுமி தற்கொலை

image

காவேரிப்பட்டினம் அடுத்த ஜோதிபுரம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி திவ்யா. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். திவ்யாவிடம் தாய் சுசிலா வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி திவ்யா வீட்டில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நேற்று காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Similar News

News January 24, 2026

கிருஷ்ணகிரி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக நாளை மாவட்டத்தில் உள்ள 1,150 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே தகுதியான நபர்கள் அருகில் உள்ள தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று, புதிதாக பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் செய்தல் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கவும். *கடைசி வாய்ப்பு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News January 24, 2026

கிருஷ்ணகிரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News January 24, 2026

ஓசூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதி பயங்கர விபத்து

image

ஒசூா் பத்தலப்பள்ளியில் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அடுத்தடுத்து 3 காா்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 3 காா்களும் சேதமடைந்தன. வாகன நெரிசலில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவா்களின் இடையே புகுந்து சென்றனா். ஒருமணி நேரத்துக்குப் பிறகு விபத்தில் சிக்கிய ஒரு காரை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது

error: Content is protected !!