News May 17, 2024

கிருஷ்ணகிரி: கொட்டித் தீர்த்த கனமழை!

image

வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டன. மாலை 4 மணிக்கு தொடங்கி 1 மணி நேரத்திற்கு மேலாக வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, நாச்சிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News March 13, 2026

கிருஷ்ணகிரியில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

பர்கூர் அடுத்த ஒரப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பின்னால் வந்த ஈச்சர் வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!