News October 10, 2024
கிருஷ்ணகிரி இளைஞர்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இளம் பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர் ஓராண்டு புத்தாக்கம் சான்றிதழ் படிப்பிற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வகுப்புகள் வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ளது. மேலும்
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சிவபாரத் 8680802707, 8668107552,
8668101638 என்ற எண்ணில் அழைத்து விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 குறித்து விழிப்புணர்வு பதாகைள் வைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர் & ஆட்சியர் தினேஷ் குமார் அவர்கள் இன்று நவ,13 நேரில் பார்வையிட்டார். பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தம் குறித்து கலந்துரையாடி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்கு சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
News November 13, 2025
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (13.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
கிருஷ்ணகிரி:தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


