News November 26, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.25) இரவு 10 மணி முதல் இன்று (நவ.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <
News January 14, 2026
கிருஷ்ணகிரி: நடந்து சென்ற டிரைவர் பலி!

சூளகிரி அடுத்த இம்மிடிநாயக்கனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் மாரப்பன் (35). இவர் ஓசூர் தோட்டகிரி அலசநத்தம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 11-ந் தேதி இவர் கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டையனூர் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News January 14, 2026
கிருஷ்ணகிரியில் தொழிலாளி துடிதுடித்து பலி!

ஓசூர் அடுத்த ஜூஜூவாடியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சீனிவாசன் (47). இவர் கடந்த 11-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பெங்களூரு-ஓசூர் சாலையில் சேற்று கொண்டிருந்தார். அப்போது ஜூஜூவாடி அருகே அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குளானது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


